ரோஜாப் பூவினால் தயாரிக்கப்படும் ‘குல்கந்து அருந்தினால் எந்த நோயெல்லாம் ஓடிடும் தெரியுமா ?
பொதுவாக ரோஜா பூக்கள் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்க கூடியது ஆகும்
ரோஜா சர்பத்தை அருந்தினால் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் போன்ற நாள் பட்ட குணமாகும். ரோஜா இதழ்களை கொதிக்க வைத்து காலை, மாலை குடித்துவந்தால் மலச்சிக்கல் விலகும்மேலும் ரோஜா இதழ்கள் மூலம் குணமாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக ஆரோக்கியம் மிகுந்த ரோஜா மலரானது இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. இதன் இதழ் நரம்புமண்டலத்திற்கு நன்மை தருகிறது.
2.ஆரோக்கியம் மிகுந்த ரோஜா மலரானது தொண்டைநோய், சளி, இருமல், சுவாசநோய், நாவறட்சியைக் குணமாக்கும்.
3.வயிற்று போக்கு உள்ளோருக்கு ரோஜா இதழ்களில் உள்ள துவர்ப்புச் சுவை, வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும்.
4.மலசிக்கல் உள்ளோருக்கு ரோஜாப் பூவினால் தயாரிக்கப்படும் ‘குல்கந்து’ மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்தது.
5.வாய்ப்புண் உள்ளோருக்கு ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். குல்கந்தை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடைந்து சருமம் பளபளப்பாகும்.
6. வயிற்றுவலி உள்ளோருக்கு உஷ்ணம் காரணமாக ஏற்படும் வயிற்றுவலி நீங்க இது உதவும்.
7.மனக்கவலை உள்ளோருக்கு ரோஜா இதழில் தயாராகும் பன்னீர், மயக்கத்தையும், மனக்கவலையையும் போக்கும்.
8.ரோஜாப் பூவைக் கொண்டு தயார் செய்யப்படும் இனிய சுவையுள்ள சர்பத், ரத்த விருத்திக்கு பயனுள்ள ஒரு டானிக் ஆகும்.
9.. காது வலி உள்ளோருக்கு ரோஜா எண்ணெய் புண்களை ஆற்றும். காதுவலி மற்றும் பல் ஈறுகளில் ஏற்படும் புண்ணுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
10.சரும நோய்கள் உள்ளோருக்கு ரோஜா இதழ்கள் மூலம் அந்த சரும நோய்கள் நீங்கும்.


