கொதித்த பப்பாளி பழ நீரை குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

 
papaya

பொதுவாக  வெறும் வயிற்றில் ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் அன்றைய நாள் உற்ச்சாகமாக இருக்கும் ,அதே வயிறு எரிச்சல் ,நெஞ்செரிச்சல் உண்டாக்கும் உணவை உட்கொண்டால் அன்றைய நாள் மோசமானதாக அமையும் .வெறும் வயிறில்  பப்பாளி உண்பதால் உண்டாகும்  நன்மைகளை பார்க்கலாம்
1.இந்த பழத்தில் இதய நலன், ஜீரண மண்டலம், புற்றுநோய் எதிர்ப்பு பண்பு என பலவிதமான ஆரோக்கிய கூறுகள் உள்ளன.

heart
2.பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பப்பாளியை தண்ணீரில் போட்டு வெறும் வயிற்றில் குடித்தால் பல நன்மைகள் உடலுக்கு வந்து சேர்கின்றது.
3.ஒரு முழு பப்பாளி பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
4.பின் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்த பப்பாளி பழம் மற்றும் தண்ணீரை குளிர வைத்து விட்டு தண்ணீர் போல குடிக்கலாம்.   
5.காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பப்பாளி பழம் கொதிக்க வைத்த நீரை குடிப்பதால் உங்களது குடலை அது சுத்தப்படுத்தும்.
6.மேலும், குடலில் உள்ள நச்சுத்தன்மைகளையும் அது நீக்கிவிடும்.
7.மேலும் இது  பலவிதமான புற்றுநோய்களில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கும், இதய நலனை காப்பதற்கும், நரம்பு மண்டலங்களுக்கு ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.