ஊமத்தை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்ட எந்த வலி பறந்து போகும் தெரியுமா ?

பொதுவாக உடலில் உண்டாகும் வலிகளுக்கு சில இயற்க்கை வழிகளை கொடுத்துள்ளோம் .படித்து பயன் பெறுங்கள்
1.கறுப்பு உளுந்தை மாவாக்கி களி செய்து சாப்பிட வலியெல்லாம் பறந்து போகும் .
2.தேங்காய் பாலுடன் , உளுந்து மாவைச்சேர்த்து கஞ்சி செய்து குடிக்க பல வலிகள் ஓடி விடும்
3.சதகுப்பை விதையை அவித்து, பின் சதகுப்பை வேருடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போட அனைத்து வலிகளும் பஞ்சாய் பறந்து போகும்
4.வலியுள்ள இடத்தில கருஞ்சீரகத்தை நீர்விட்டு அரைத்துப் பூச வலிகளிலிருந்து வழி பிறக்கும் .
5.வலியுள்ள இடத்தில ஊமத்தை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்ட வலி பறந்து ஓடி விடும் .
6.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வலிகளெல்லாம் ஓடி விடும்
7.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிட வாயு வலி ஓடி விடும்
8.முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் போதும் வலியெல்லாம் ஓடி விடும் .
9.பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து கஞ்சி போல நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட இடுப்பு வலி , மூட்டு வலி உடல்வலி பறந்து போகும்