பாடாய் படுத்தும் நெஞ்செரிச்சலை ஓடஓட விரட்டும் அற்புத வழிகள்

 
stomach


இன்றைக்கு பெரும்பாலானோரை வாட்டும் ஒரு உடல் பிரச்சினை எதுவன்றால் நெஜெரிச்சல் பிரச்சினை என்று கூறலாம் 
பொதுவாக நெஞ்செரிச்சல் பிரச்சினைக்கு நிறைய காரணமிருந்தாலும்  காலை சிற்றுண்டியை சாப்பிடாமல் விடுவது ,நேரத்துக்கு சாப்பிடாமல் கண்ட நேரத்தில் கண்டதை சாப்பிடுவது  நொறுக்கு தீனிகள் முதல்  தினமும் நைட் லேட்டாக  உறங்குவது, கவலை, மன அழுத்தம் ,அதிகக் கார உணவு, துரித உணவு, போன்றவை வாலிபர் முதல் வயோதிகர் வரை வாட்டுகிறது 

stomach
என்ன முதலுதவி?

இந்த நெஞ்செரிச்சளுக்கு சிறந்த தீர்வு இளநீர் குடிப்பது முதல் மோர் குடிப்பது வரை எனலாம் .மேலும் ஜெலுசில் போன்றவைகளையும் குடிக்கலாம் .என்னதான் மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் மேலே சொன்ன வழி முறைகளை பின் பற்ற வேண்டும் 

மேலும் அளவுக்கதிகமாக ஒரே வேளையில் சாப்பிடுவதைவிட அந்த உணவை பிரித்து பல வேளையில் சாப்பிடலாம்  . அடுத்து தக்காளி சாஸ், ஆரஞ்சு, எலுமிச்சை, காபி, டீ, சாக்லேட், மென்பானம், நூடுல்ஸ், புரோட்டா, போன்ற துரித உணவுகளை விடமுடியாவிட்டலும் குறைத்து கொள்வது சிறந்தது . இட்லி ,இடியாப்பம் .போன்ற ஆவியில் வெந்த உணவு மற்றும் பழம் காய்களை உண்ணுங்கள் 

அடுத்து ,எந்த வேலையிருந்தாலும் அவசரமாக சாப்பிடாதீர்கள் நிதானமாக சாப்பிடுங்கள் .அடுத்து சாப்பிட்டு முடித்ததும் குணிந்து  நிமிர்ந்து வேலை செய்யக்கூடாது .மேலும் இறுக்கமான ஆடைகளை சாப்பிடும்போது அணியாதீர்கள் .