என்னது !வெண்டைக்காய் தண்ணீரில் இவ்ளோ நன்மை அடங்கியிருக்கா ?

 
ladies finger

பொதுவாக வெண்டைக்காயை சாம்பார் முதல் பொறியியல் வரை பல விதமாக சமைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த  வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரையும் குடிக்கலாம்.வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

வெண்டைக்காய் தண்ணீரில் உள்ள வைட்டமின் C கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.

1.வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்த  நீரானது எடை இழப்பு, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், இதய நோய் போன்ற பல பிரச்சனைகளுக்கு நன்மை அளிக்கிறது.

ladies finger for sugar patient

2.ஒரு ஜாரில்  வெட்டிய வெண்டைக்காயுடன் 1.5 லிட்டர் தண்ணீர் சேர்த்து, ஜாரை சுத்தமான துணியால் இறுக்கமாக மூடி, வெண்டைக்காயை குறைந்தது 8 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.பின் நீரை வடிகட்டி குடித்து பயன்பெறலாம்.

3.வெண்டைக்காயில் இன்சுலின் உற்பத்திக்கு உதவும் பல கலவைகள் உள்ளன. இந்நிலையில் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் வெண்டைக்காய் தண்ணீர் உதவும்.

4.வெண்டைக்காய் தண்ணீர் நம் உடலை ஆற்றலுடன் செயல்பட அனுமதிக்கும்.சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக செயல்பட வெண்டைக்காய் தண்ணீர் குடிக்கலாம்.

5.வெண்டக்காய் நீரில் நிறைந்துள்ள ஃபோலிக் ஆசிட் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.

6.வெண்டைக்காய் நீர் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

7.வெண்டைக்காய் நீர் மூலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவுகளையும் குறைக்கலாம்.

8. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெண்டைக்காய் நீரை எடுத்துக் கொள்ளலாம்.

9.வெண்டைக்காயில் உள்ள பொட்டாசியம் மூளையின் செயல் திறனை அதிகரிக்க உதவுகிறது.

10.வெண்டைக்காய் நீர் எலும்புகளை வலுப்படுத்தவும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.