கற்பூரவள்ளி இலையின் துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச எந்த நோய் காணாமல் போகும் தெரியுமா ?

 
karpooravalli

பொதுவாக கற்ப்பூர வள்ளி இலைகள்  பற்றி சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிட்டுள்ளனர் .எனவே சளி காய்ச்சல் மற்றும் வயிறு தொல்லைகளின் காவலன் இந்த கற்ப்பூர வள்ளி மூலிகை .இதன் பயன்கள் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்

1. கற்பூரவள்ளி இலைகள் உடன் வெற்றிலை ,மிளகு சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை காலை, மாலை - பருக பல நோய்கள் ஓடி விடும் .
2.இந்த நீரை தொடந்து  அருந்தி வர நுரையீரல் சளி, ஆஸ்துமா, காசநோய், நாள்பட்ட சளி குணமாகும்.  
3.சிலருக்கு புகை பிடித்து நுரையீரல் கெட்டு போயிருக்கும் .அப்போது கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை நன்கு சுண்டக்காய்ச்சி விடுங்கள் . அதை  வடிகட்டி அருந்தி வந்தால்  நுரையீரலில் தங்கியிருக்கும் நச்சுகள், மாசுகள் நீங்கும்.

lungs
4.கற்பூரவள்ளி இலைகளை கசக்கி அதன் துளிகளை உள்ளுக்கு அருந்தி வாருங்கள்  காய்ச்சல் குணமாகும்
5.அடுத்து நெஞ்சு, கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் கற்பூரவள்ளி இலைகளை நன்கு கசக்கி சூடு பறக்க தேய்த்து கொள்வதாலும் ஜுரம் உடலை விட்டு ஓடியே விடும்
6.கற்பூரவள்ளி செடிகளின் இலைகள்  சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து கிட்னியின்  நலனை காக்கிறது.
7. கற்பூரவள்ளி செடியின் இலை சாறை  உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் ஓடியே விடும் .
8.கற்பூரவள்ளி  இலையின் சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் மாயமாய் மறைந்து விடும்