மல்லிகைப் பூவை கொதிக்க வைத்த நீரை குடித்தால் எந்த நோயிலிருந்து காக்கும் தெரியுமா ?

பொதுவாக மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது .இப்பதிவில் நாம் மல்லிகைப்பூவின் ஆரோக்கியம் பற்றி காணலாம்
1.பத்து மல்லிகைப்பூவை தினமும் தண்ணீரில் இட்டு வைத்து அந்த பூவையும் தண்ணீரையும் குடித்து வருவோருக்கு வயிற்றில் உண்டாகும் அல்சரை குணப்படுத்தலாம் .
2.மேலும் சிறுநீர் கோளாறுகள் ,சிறுநீர் கடுப்பு ,சிறுநீர் கல் போன்ற கோளாறுகளையும் இந்த மல்லிகை பூ வைத்தியம் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது .
3.மேலும் ஸ்கின் பிரச்சினைகள் ,கண் பார்வை ,மன அழுத்த பிரச்சினைகள் போன்ற வற்றையும் இந்த மல்லிகை பூ வைத்தியம் குணப்படுத்தும்
4.மேலும் மல்லிகைப் பூவை சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் கொக்கி புழு, நாடாப் புழு அழிந்து வயிற்று வலி ஏற்படாது.
5.நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து அவர்களின் ஆரோக்கியம் சிறக்கும்
6.வாய்ப்புண் இருப்பவர்கள் ,காலாணியால் அவதிப்படுபவர்கள் இதன் இலைச்சாறு கொண்டு தடவினால் விரைவில் குணம் கிடைக்கும்
7.மல்லிகையின் பூவுடைய எண்ணெய்,தலையில் தேய்த்து முழுகினால்,உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு ,மன அழுத்தம் குறைந்து புத்துணர்வோடு காணப்படுவர்