தினமும் திராட்சை சாறு குடித்தால் பெண்களின் எந்த பிரச்சினை சரியாகும் தெரியுமா ?

 
pregnent women pregnent women

பொதுவாக திராட்சையில் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உண்டு .இந்த திராட்சை பழம் மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

grapes

1.திராட்சையில், விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 மற்றும் விட்டமின் சி,பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

2.மேலும் திராட்சை பழம், மூளை, இதயத்தை வலுவடையச்செய்யும்.

3.மேலும் திராட்சை பழம் வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை குணமாக்கும் 

4.திராட்சை பழம் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல், வாய்க்கசப்பு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.

5.மேலும் திராட்சை பழம் ரத்தத்தில் குளுகோஸ் அளவு சீராகி, உடலில் கொழுப்புச்சத்து சேர்வதை தடுக்கும்.

6.திராட்சை பழம் மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

7.திராட்சை பழம் ரத்த சோகைக்கும், காமாலை நோய்க்கும் கூட  சிறந்த மருந்தாகிறது.

8.திராட்சை பழம் குடல் புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது.

9.திராட்சை பழம் களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.

10.திராட்சை பழம் அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றுக்கு திராட்சை சிறந்த மருந்து.

11.தினமும் திராட்சை சாறு குடித்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.

12.திராட்சை பழம் உஷ்ணத்தினால் ஏற்படும் சிறுநீர் கடுப்பை குணப்படுத்துகிறது.

13. ஜலதோஷத்தினால் மூக்கில் இருந்து நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திரட்சை பழச்சாறு குணப்படுத்துகிறது.