குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நெய் எப்படி உதவும் தெரியுமா ?

 
baby

பொதுவாக  நெய் மூலம் பெறப்படும் ஆரோக்கியம் பற்றி ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் .
1.நெய் நம் உடல் எடை குறைக்கவும் ,இதயம் மற்றும் கல்லீரல் சிறப்பாக செயல்படவும் ,கண்பார்வை மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கும் நல்ல பலனளிக்கிறது .

ghee

2.சிலருக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும் .அவர்களுக்கு  நெய் உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது மற்றும் வயிற்று பிரச்சனைகளைத் தடுக்கிறது.
3.நெய்யில் இருக்கும்  நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் , குழந்தைகளுக்கு நல்ல ஆற்றலையும் வழங்குகிறது.
4.முதல் ஐந்து வருடங்களில் குழந்தையின் மூளை வளர்ச்சி அடைய நெய் உதவுகிறது .
5.நெய் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் வளமான மூலமாக செயல்படுகிறது .
6.அதனால் நெய் குழந்தைகளின் எடை அதிகரிக்க உதவுகிறது மற்றும் குழந்தையின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
7.வீட்டில் செய்த பசுவின் நெய் மூலம் மசாஜ் செய்தல் குழந்தையின் சருமத்தை மேலும் மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்
.