ஒவ்வொரு பூக்களிலும் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்

 
Flower

பொதுவாக  பல்வேறு நன்மைகளை செய்கிறது பூக்கள்.
குறிப்பாக பூக்கள் தலையில் வைத்து பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகின்றது.இந்த பூக்களின் ஆரோக்கிய நன்மை பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.பூக்கள் விழாக்காலங்களில் அழகுக்காக அல்ல, ஆரோக்கியத்துக்காகவும்  கூந்தலில் அந்த காலத்து பெண்கள்  சூடி வந்தனர் ,ஆனால் இன்றைய மாடர்ன் பெண்கள் தலை விரி கோலமாக வெளியே சென்று வருகின்றனர் .

health tips of roja flower
2.அந்த காலத்தில் பெண்கள் ரெட்டை ஜடை போட்டு ,தலையில் பின்னலிட்டு பூ வைத்து கொண்டு சென்று வந்தனர் .
3.ஆனால் இன்று ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும்தான் அதுவும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்தான் தலையில் பூ வைப்பதை காண்கிறோம் .
4.பூக்கள் சூடுவது பெண்களுக்கு அழகு மட்டுமில்லை ,ஆரோக்கியமும் தரும் ,ரோஜா பூ க்களிருந்து தயாரிக்கப்படும் ரோஜா குல்கந்து உடலின் அல்சர் முதல் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ,
5.மல்லிகை பூக்கள்வயிற்று புண் முதல் பல்வேறு புண்களை குணமாக்கும் .
6.செண்பகப்பூ நம் மன அழுத்தத்தை குறைக்கும் .செண்பகப்பூ சூடுவது நமக்கு மன அமைதியை கொடுக்கும்
7.சித்தகத்திப்பூக்கள் ஒற்றைத்தலைவலி தீராத தலைவலி, அதிக குளுமையால் ஜன்னி, நீர்க்கோர்வை, தலைப்பாரம் போன்ற பிரச்சனைகளை தீர்ப்பவை.எனவே நாகரீக பெண்களே இனியாவது உங்களின் ஆரோக்கியம் கருதி தலையில் பூ சூடுங்கள்