சர்க்கரை நோயாளிகள் மீன் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?

 
sugar

பொதுவாக அசைவ உணவுகளில் மீனில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .குறிப்பாக மீனில் நிறைய வைட்டமின் மற்ற அசைவ உணவை விட அதிகம் உள்ளது .எனவே இந்த பதிவில் மீன் மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் குறித்து நாம் காணலாம்

1.மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத் தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

fish

2.குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சத்தான உணவு தேவை .மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத் திறனுக்கும் உதவுகிறது.

3.இந்த காலத்தில் இதய நோய் அதிகம் உள்ளது .மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

4.மேலும் மீன் உண்பதால் இரத்தக்குழாய் மற்றும் உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகைசெய்கிறது.

5.ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டோர், மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், ஆஸ்துமாவின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

6. குழந்தைகளுக்கு மீன் கொடுத்து வந்தால், ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.

7.நீரிழிவு உள்ளவர்கள், மீனை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம்.

8.மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங் கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை  குறைக்கிறது.