அடிக்கடி முட்டை சாப்பிட்டால் எந்த ஹாஸ்ப்பிட்டல் படியேற வேணாம் தெரியுமா ?

 
egg

சிறுவர் முதல் பெரியவர் விரும்பும் ஒரு உணவு எதுவென்றால் அது முட்டை என்று கூறலாம் .இந்த முட்டையை ஒவொருவரும் ஒவ்வொரு விதமாக சாப்பிடுவது உண்டு .சிலர் ஆம்லெட்டாகவும் ,சிலர் ஆப் பாய்லாகவும் ,சிலர் அவித்தும் ,சிலர் பச்சையாகவும் ,சிலர் பொரியல் செய்தும் சாப்பிடுவர் .இதில் விட்டமின் டி மற்றும் ப்ரோட்டீன் சத்துக்கள் அடங்கியுயள்ளதால் தினசரி ஒரு முட்டை சாப்பிடலாம் .மேலும் சுகர் பேஷண்டுகள் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சாப்பிடலாம் .நம் உடலில் நல்ல கொழுப்பை கொடுக்க கூடிய ஒரு பொருள் முட்டை .தினம் ஒரு முட்டை சாப்பிடுவது நம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

egg

1.இதய நோயாளிகள் முட்டை சாப்பிட தயங்குவர் ,ஆனால் தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2.சிலர் உடல் எடையை முட்டை கூட்டமோ என்று பயப்படுவர் .ஆனால் முட்டையை தனியாக சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்து கிடைப்பதுடன் உடல் எடையைக் குறைக்கும்.

3.மேலும் தினம் முட்டை உண்பதால்  உடலில் ஹெச்டிஎல் எனும் அமிலச் சுரப்பை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கிறது.

4.தினம் ஒரு முட்டை உண்பது நம் பசியைக் குறைக்கிறது.

5.முட்டைகளில் கலோரி குறைவு என்பதாலும் உடல் எடை அதிகரிக்காது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்