முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் மர்மங்கள்
பொதுவாக கோழி முட்டையில் நம் உடலுக்கு நன்மை தரும் பல்வேறு விட்டமின்கள் அடங்கியுள்ளது மேலும் முட்டையில் புரத சத்துக்கள் அதிகமாக உள்ளது .
இந்த பதிவில் முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
1.பொதுவாகவே முட்டையை அனைவரும் உணவில் பல்வேறு வடிவில் சேர்த்துக் கொள்வார்கள். ஆம்லெட்டாகவோ அல்லது அவித்தோ எடுத்து கொள்வார்கள்
2.ஏனெனில் இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது ..
3.ஆனால் ஆரோக்கியம் மிகுந்த முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவை பலரும் சாப்பிட மறுப்பார்கள்.
4.ஆனால் மஞ்சள் கரு சாப்பிட்டால் அதில் இருக்கும் இரும்பு சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து நம்மை ஆரோக்கியமாய் வைக்கிறது
5.இது மட்டும் இல்லாமல் முட்டை மஞ்சள் கரு இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.
6.மேலும் முட்டை மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ ஏராளமாய் நிறைந்துள்ளது
7.மேலும் முட்டை மஞ்சள் கருவில் உள்ள விட்டமின் டி எலும்பு பிரச்சனை வராமல் தடுக்கிறது.
8.சிலர் முட்டை மஞ்சள் கருவில் கொழுப்பு இருப்பதாக கூறுவர் . இதற்கும் கொலஸ்ட்ராலுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதை அறிந்து கொள்வோம்.
9.எனவே இதனை நிராகரிப்பதை தவிர்த்து உண்டு வந்தால் ஆரோக்கியமாய் வாழலாம்
10.அதில் இருக்கும் ஆரோக்கியத்தை அறிந்து உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்