என்னது !கழுதைப்பாலுக்குள் இவ்ளோ ஆரோக்கியம் அடங்கியுள்ளதா ?நம்பவே முடியலே ..

 
donkey

பொதுவாக கழுதைப் பாலில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது .இதில் முதுமையை தள்ளி போடும் பண்பு  மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இதன் பயன்கள் பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்

1.கழுதைப் பாலில் பசுவின் பாலை விட வைட்டமின் சி,கால்சியம்  நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
2.இதனால் இது மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

donkey
3.. இன்றும் கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு ஏற்ப்படும்   ஆஸ்துமா, சளி, இரும்பல், மஞ்சள்காமாலை, கீல்வாதம், ஆகியவற்றை கழுதைப்பால் மூலம் குணப்படுத்த முடியும் என்று நினைக்கின்றனர் .
4.இதை  இந்திய சித்த மருத்துவமும் தெரிவிக்கிறது.
5.தாய்  பால் போன்றே  கழுதைப்பால்  வைரஸ்கள் மற்றும்  பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கக் கூடியதாக உள்ளதால் இதற்கு டிமாண்ட் கூடியுள்ளது .
6.. கழுதை பாலின்   புரதங்கள் நுரையீரல் புற்றுநோய்க்கு   மருந்தாகும் என்ற கருத்தால் அதற்கு மேலும் மவுசு கூடியுள்ளது
7.ஆய்வின்படி கழுதைப் பாலில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கால்சியம் அதிகளவில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது
8.கழுதைப்பால் மனித பாலுடன் மிக நெருக்கமான பண்புகளை கொண்டுள்ளது.
9.கழுதைப்பால் குறைவான கலோரிகள் மற்றும் அதிக அளவில் வைட்டமின்கள் கொண்டுள்ளதால் ,கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.