சோர்வாக உணரும்போது இந்த பழம் சாப்பிட்டால் போதும் உடனடி உற்சாகம் பிறக்கும் .
பொதுவாக மலிவான விலையில் கிடைக்கும் பேரீச்சம் பழத்தில் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.நம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் அதை அதிகரிக்க நாம் இந்த பழத்தை சாப்பிடலாம் .
2.மேலும் எக்சர்சைஸ் செய்வோர் ரெகுலராக இந்த பழத்தை எடுத்து கொண்டால் உடனடி ஆற்றல் உண்டாகும் 3.மேலும் மதிய வேலையில் நாம் சோர்வாக உணரும்போது இந்த பழம் சாப்பிட்டால் போதும் உடனடி உற்சாகம் பிறக்கும் .
4.ஆனால் இதில் கலோரிகள் அதிகம் என்பதால் சுகர் பேஷண்டுகள் அளவுடன் எடுத்து கொள்வது நலம்
5.கண்பார்வை குறைபாட்டை குணப்படுத்த சிறந்த மருந்து பேரீச்சம் பழமே என்றால் அது மிகையாகாது
6. மாலைக்கண் நோயால் பாதிக்க பட்டவர்கள், தேனுடன் பேரீச்சம் பழத்தை கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் அந்த நோய் விரைவில் குணமாக வாய்ப்புண்டு
7.இந்த பேரீச்சம் பழத்தில் கண்ணுக்கு தேவையான விட்டமின் ஏமிகுந்திருப்பதால் கண் கோளாறுகள் வராது