வெள்ளரிக்காய் எந்த நோயாளிக்கு நன்மை செய்யும் தெரியுமா ?

 
cucumber cucumber

பொதுவாக  சுகர் பேஷண்டுகள் உணவு விஷயத்திலும் ,நேரத்துக்கு எடுத்து கொள்ள வேண்டிய மருந்து மாத்திரை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் .அவர்க்ளின் ஆரோக்கியத்துக்கு சில டிப்ஸ்களை இந்த பதிவில் நாம் காணலாம்
1.நேரம் தவறாமல் மருந்தை  எடுத்து கொள்ள வேண்டும் .அவர்கள் வெளியூர் பயணம் சென்றால் சில விஷயங்களை பின்வருமாறு கடை பிடித்தல் நலம்
2..டூர் போகும்போது நம் தங்குவது ஹோட்டல் என்றால் அரிசி உணவுகளைக்குறைத்து ஆம்லெட் , சிக்கன் , பன்னீர் போல எளிதாக எல்லா ஹோட்டல்களில் கூட கிடைக்கும் இவற்றை நிறைய உண்ணலாம்.
3.வெள்ளரிக்காய் வாங்கி ரூமில் வைத்துக்கொண்டால் இரவு உணவுக்கு பின் காலை எழுந்தவுடன் மற்றும் பயணங்களில் வெள்ளரிக்காயை உண்பது மிகச்சிறந்த வழிமுறை.

sugar
4.வெள்ளரிக்காய் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
5.இப்போது தான் நிறைய கடைகள் , ஹோட்டல்களில் ஸ்மூத்தி கிடைக்கிறது. வெஜிடபிள் ஸ்மூத்தி ஏதாவது ஒன்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
6.நாவல் கொட்டை சூரணம் அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் இதனை ஒரு பாக்கெட் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.
7. வெளியூர் சென்ற நாட்களில் காலை உணவுக்கு பின் , இரவு உணவிற்கு பிறகு என்று இதை நீரில் கலந்து குடித்து வந்தால் சுகர் அளவு உயராமல் நம்மை பாதுகாக்கலாம் .