அவரையில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்

 
bone

பொதுவாக அவரையில் பல வகைகள் உண்டு அதுபோல அதில் பல நன்மைகளும் உண்டு .உதாரணமாக  அவரையில் பொதிந்துள்ள புரதச்சத்தும், நார்ச்சத்தும் ஒருங்கே சேர்ந்து உடல் எடை குறைவதற்கு உதவுகின்றது. இது உடலில் சேர்ந்த கொழுப்புச் சத்தை வெளியேற்றவும் வகை செய்கிறது. இதனால் இதய நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் இதயம் சீராகச் செயல்படுவதற்கும் ஏதுவாகின்றது.மேலும் அவரையின் நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் காணலாம்

1.அவரைக்காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கின்றன. இது உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது.

2.அவரைக்காயின் மூலம்  உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது.

3.அவரையில் அடங்கியுள்ள  கால்சியம் சக்தி தான் உடலின் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு அவசியமானதாக இருக்கிறது.

teeth

4.அவரையில் உடலுக்கு ஊட்டச்சத்தும் மருந்தும் ஆகும் பொருட்கள் மலிந்துள்ளன. அவரையில்போலேட்என்னும் விட்டமின் சத்து மிகுதியாக உள்ளது.

5.ஒரு கப் அவரையில் ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்குத் தேவையானபோலேட்விட்டமின் சத்தில் 44% அளவு உள்ளது.

6.அவரையில் உள்ள இந்தபோலேட்தாவர ரசாயன மாற்றங்களுக்கு உறுதுணையாய் நின்று மரபு அணுக்களின் உற்பத்திக்கும், செல்களின் வளர்ச்சிக்கும், அமினோ ஆசிட்கள் உருவாவதற்கும் உதவுகிறது.

7.மேலும் கர்ப்பிணிகளின் வயிற்றில் வளருகின்ற குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்தினைத் தருவதாகவும் அவரையில் உள்ளபோலேட்உதவுகின்றன.

8.அவரையில் உள்ள இரும்புச் சத்து ரத்த சிவப்பு அணுக்கள் உருவாக உதவுகின்றது.

9.அவரை சர்க்கரை நோயாளிகளுக்கு உரித்தான மலச்சிக்கல் நோய்க்கும் இது மருந்தாகிறது.