வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் குறையாம இருக்கணுமா ?அப்ப இதெல்லாம் செய்யுங்க

 
face mask

பொதுவாக நமக்கு வயது அதிகமாக அதிகமாக முகத்தில் சுருக்கம் மற்றும் புள்ளிகள் தோன்றும் இந்த சுருக்கம் மற்றும் புள்ளிகள் தோன்றாமல் இருக்க சில இயற்கையான தீர்வுகள் உண்டு

வீட்டில் இருந்தபடியே எப்படி முகத்தை எளிய முறையில் பொலிவு பெற செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

1.முதலில் கடலை மாவு அல்லது பாசி பருப்பு மாவு 50 கிராம் எடுத்து கொள்வோம்

2.அடுத்து சுத்தமான மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் அதனுடன் எடுத்து கொள்வோம்

turmeric

3.அடுத்து பன்னீர் சிறிதளவு எடுத்து கொள்ள வேண்டும்

4.தண்ணீர் அல்லது பால் தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும்

5.இப்போது முகத்தை பொலிவாக்க உதவும் கலவையை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் .முதலில் கடலை மாவுடன் மஞ்சள் தூளை கலக்க வேண்டும்.

6.அடுத்து அந்த கடலை மாவுடன் பால் அல்லது தண்ணீர் ஊற்றி கலந்துக்கொள்ள வேண்டும்

7.இறுதியாக அந்த கடலை மாவு மற்றும் மஞ்சளுடன் பன்னீர் தெளித்து எடுத்தால் பேஸ்ட் ரெடி.

8.மேற்கூறிய கலவையை இதை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி விடவும்

9. பின்னர்  20நிமிடங்கள் கழித்த  பின்னர் முகத்தை கழுவ வேண்டும்.

10.இப்படி அடிக்கடி செய்து வந்தால் முகம் பொலிவுடன் இருக்கும்