பல் மீது தேங்காய் எண்ணெய் தடவ எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

 
Coconut Oil Coconut Oil

பொதுவாக பலர் மஞ்சள் பல்  பிரச்சினையால்  மற்றவரிடம் பேசுவதையோ அல்லது சிரிப்பதையோ கூட தவிர்த்து விடுவதுண்டு .இந்த மஞ்சள் பல்லை வெண்மையாக்க பல இயற்கை வழிகள் உண்டு .அது பற்றி இந்த பதிவில் பாக்கலாம் 

1.பற்கள் மஞ்சளாக இருப்பதை தடுக்க முதலில், உங்கள் பற்களை ஒரு நாளைக்கு 2 தடவைகள் துலக்குங்கள்.தினம் இரவில் உணவு உண்ட பிறகு கண்டிப்பாக பல் துலக்க வேண்டும்.
2.பற்கள் மஞ்சளாக இருப்பதை தடுக்க காலையில் வெறும் வயிற்றிலேயே தேங்காய் எண்ணெயிலோ அல்லது வேறெந்த எண்ணெயிலோ வாயை கொப்பளிக்க நல்ல மாற்றம் வரும் . 
3.பற்கள் மஞ்சளாக இருப்பதை தடுக்க பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்த்து பேஸ்டுடன் பிரஷ் செய்ய நல்ல மாற்றம் வரும் 
4.பற்கள் மஞ்சளாக இருப்பதை தடுக்க வாழைப்பழம், ஆரஞ்சு அல்லது எலுமிச்சை தோல்களை பல்லின் மீது தேய்க்க நல்ல மாற்றம் வரும் 
5.பற்கள் மஞ்சளாக இருப்பதை சரி செய்ய பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவை எடுத்துக் அதிகம் கொள்ள நல்ல மாற்றம் வரும் 
6.பற்கள் மஞ்சளாக இருப்பதை சரி செய்யவும் , இயற்கையாகவே உங்கள் பற்களை வெண்மையாக்க எளிய வழிகளில் ஒன்று ஸ்ட்ராபெர்ரி பழங்களை அதிகம்  சாப்பிடுவது. .
7.நீங்கள் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும்  அல்லது இனிப்பு ஜூஸை குடித்த பிறகு பல் துலக்குங்கள்..
8.மஞ்சள் பல் மீது தேங்காய் எண்ணெய் தடவவும். உங்கள் நாக்கையும் நாக்கு வழிப்பான் கொண்டு  துலக்குங்கள்.