வைட்டமின் குறைபாடிருந்தால் என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

 
fish

பொதுவாக விட்டமின்  குறைபாட்டால் உடல் வலி ,மூட்டுகளில் வலி ,எலும்பு தேய் மானம் ,உடல் அசதி ,சர்க்கரை நோய் ,லிவர் பாதிப்பு போன்ற நோய்களால் குழந்தை முதல் பெரியவர் வரை அவதிப்படுகின்றனர் ,விட்டமின் டி வெயிலில் இருந்தால் நம் உடலில் உறப்த்தியாகிவிடும் .இதன் பாதிப்பு பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.வைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். 2.வைட்டமின் ‘டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.  முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.
3.வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். ; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.

egg
4.வைட்டமின் சி அதிகம் உள்ள பொருட்கள்
ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் அவற்றை அதிகம் உண்ணுமாறு டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்
5.சிலருக்கு வைட்டமின் ‘ஈ’ இல்லாமல் எந்நேரமும் பலவீனமாக இருப்பர் .மேலும் இது குறைந்தால் தசைகள் பலவீனமடைந்து . மலட்டுத் தன்மையை உண்டாக்கும்.
6.வைட்டமின் ‘ஈ’ உள்ள பொருட்கள்
 கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ நம் உடலுக்கு கிடைத்து நம் ஆரோக்கியம் மேம்படும்