வெற்றிலை மீது விளக்கெண்ணெய் தடவி பயன்படுத்தினால் நேரும் அதிசயம்

 
vetrilai

பொதுவாக வெற்றிலை நமக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது .இதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.வெற்றிலையில்  குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரதம் நிறைந்துள்ளது .
2.சித்த மருத்துவ உலகில் வெற்றிலை சிறந்த ஒரு வலி நிவாரணியாக இருக்கிறது.
3.சிலருக்கு உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறமாக வலி இருக்கும் .இன்னும் சிலருக்கு , அடிபடுதல் போன்றவற்றால் மிகுந்த வலி ஏற்பட்டு அவதிபடுவர் .
4.அந்த  நேரங்களில்அவர்கள்  ஒரு முழு வெற்றிலையை சுத்தம் செய்து வாயில் போட்டு நன்கு மென்று நீரருந்தினால் சீக்கிரத்தில் வலி குறைந்து அவர்கள் முகத்தில் புன்னகை தவழும் .

vetrilai health benefits
5.வெட்டு காயங்கள், சிராய்ப்புகள் வீக்கங்கள் போன்றவற்றிற்கு வெற்றிலைகளை நன்கு அரைத்து காயங்களின் மீது பற்று போட்டால் அவை சீக்கிரத்தில் குணமாகி நன்மை உண்டாகும் -
6.சிலருக்கு  வயிற்றில் வாயுத்தொல்லை போன்றவை ஏற்படுகிறது.
7.மேலும் சிறு குழந்தைகள் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு, அவர்களை மிகுந்த அவதிக்குள்ளாகி நரக வேதனை அனுபவிப்பர் .
8.இச்சமயங்களில் ஒரு சில வெற்றிலைகளை எடுத்து கொண்டு, அதில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் காட்டி வயிற்றின் மீது வைத்து எடுத்தால்  வயிற்றில் இருக்கும் வாயு நீங்கி அவர்களின் ஆரோக்கியம் சிறக்கும் .