நம் உடல் நலனுக்கு எந்த காய்களை எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

 
Organic Vegetables

பொதுவாக  ஆதி கால மனிதன் காய் கறிகளை பச்சையாக சாப்பிட்டான் ,பின்னர் அதில் நெருப்பில் சுட்டு சாப்பிட்டான் .அதன் பின்னர் சுவைக்காக அதில் மசாலா சேர்த்து சாப்பிட ஆரம்பித்தான் .இப்படி  காய்கறிகளை சமைக்காமல் அப்படியே பச்சையாக எடுத்துகொண்டால் அவை எல்லாவித சத்துகளையும் உடலுக்கு கொடுக்கும். இப்படி பச்சையாய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.சமைத்து சாப்பிடுவதை காட்டிலும் அப்படியே சாப்பிடும் போது அதிலிருக்கும் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அப்படியே உடலுக்கு கிடைக்கின்றன
2.சிலர் கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளை, சமைக்காமல் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் இந்த காய்கறிகளை தொடர்ந்து பல நட்களுக்கு பச்சையாக சாப்பிட்டால் சிறுநீரகத்தை பாதிக்கலாம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்
3.சிலர் வெண்டைக்காயை கூட பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் பச்சை வெண்டைக்காய் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். செரிமான அமைப்பை பாதிக்கும். கடுமையான வயிற்று வலி, வாய்வு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்

ladies finger for sugar patient
4.உருளைக்கிழங்கை பொதுவாக பச்சையாக யாரும் சாப்பிடுவதில்லை. ஆனால் தற்போது சிலர் உருளைக்கிழங்கையும் பச்சையாக சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
5.உருளைக்கிழங்கை பச்சையாக சாப்பிடுவது பல நோய்களை உண்டாக்கும். சமைக்காத உருளைக்கிழங்கில் சோலனைன் என்ற சிறப்பு வகை நச்சு உள்ளது. இது தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
6.கத்தரிக்காயை பச்சையாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு. சமைக்கப்படாத கத்திரிக்காயை சாப்பிடுவது வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று ஆயுர்வத மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்