தினம் ரெண்டு துளசி சாப்பிட்டால் எந்த நோயை பெண்டு நிமிர்த்தலாம் தெரியுமா ?

பொதுவாக துளசி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்க கூடியது .உதாரணமாக
துளசி நுரையீரலில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மைக் கொண்டது ஆகும்.
உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.
சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும்.மேலும் துளசி மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்
1.சிலருக்கு சுகர் இருக்கும் .துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.
2.உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கு துளசி உதவுகிறது.
3.துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும்.
4.இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பதால் இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது.
5.துளசி கஷாயம் வாய் துர்நாற்றத்தையும் பால் வினை நோய்களையும் நீக்கும்.
6.மேலும் துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
7.எலுமிச்சை சாறுடன் துளசி சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு பற்று போட விரைவில் குணமாகும்.
8.துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.
9.ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும். 10.துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.