சளி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை குணமாக்கும் இந்த சூரணம்
![asthma](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/062ce2e0dd4013502440303f4ef19af6.jpg)
பொதுவாக திரிபலா சூரணம் மலச்சிக்கலுக்கும் ,சர்க்கரை நோய் ,ரத்த அழுத்தம் ,மூட்டு வலி .போன்ற பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறது .இதை எப்படி சாப்பிட வேண்டும் ,எந்த அளவுக்கு சாப்பிட வேண்டும் என்று ஒரு சித்த வைத்தியர் மூலம் கேட்டு விட்டு சாப்பிடுவது நல்லது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.சிலருக்கு இம்மியூனிட்டி பவர் குறைவாக இருக்கும் .திரிபலா சூரணம் நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் நோய் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் அனைத்து கிருமிகளையும் எதிர்த்துப் போராடும் “ஆன்டிபாடி” எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவி அவர்களை பாதுகாக்கிறது
2.சிலருக்கு செரிமான கோளாறு இருந்து கொண்டேயிருக்கும் .
3.அதை இது சரி செய்கிறது மேலும் இது மலச்சிக்கல் தீரவும், குடல்சுத்திகரிப்பானாகவும் திரிபலா சிறப்பாக செயல்பட்டு அவர்களை காக்கிறது
4.நாம் சுவாசிக்க உதவும் உறுப்பான நமது நுரை ஈரல்களில் பல வியாதிகள் தோன்றுகிறது .
5.அங்கே தோன்றும் சளி, ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற பல வியாதிகளை நீக்கும் ஒரு அற்புத மருந்தாக திரிபலா சூரணம் இருக்கிறது.
6.இது சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவி நம்மை காக்கிறது