பல்லை பாதுகாக்க சில எளிய வழி முறைகள்

பொதுவாக பற்கள் மூலமாகத்தான் நாம் உணவுகளை மென்று தின்று கூழாக்கி குடலுக்கு அனுப்புகிறோம் .மேலும் முக அழகுக்கும் ,நாம் நன்றாக பேசுவதற்கும் பற்கள் முக்கியம் .அதனால் அந்த பல்லையும் அதை தாங்கி பிடிக்கும் ஈறுகளையும் அவசியம் நாம் பாதுகாக்க வேண்டும் .,மேலும் பல் சம்பந்தமாக நாம் சில ஆரோக்கிய குறிப்புகளை கொடுக்கிறோம்
பற்களை பாதுகாக்கும் முறைகள்
1.பற்களை பாதுகாக்க பற்களை தினமும் காலை , இரவு என இரண்டு வேளையும் துலக்க வேண்டும்.
2.பற்களை பாதுகாக்க எந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும்.
சாப்பிட்ட பின்னர் பல் இடுக்குகளில் தங்கி இருக்கும் உணவு துகள்களே பாக்டீரியாக்கள் பெருக காரணமாகும்.
3.பற்களை பாதுகாக்க பற்களை நீண்ட நேரம் துலக்கக் கூடாது. ஏனெனில் பல்லின் வெளிப்புறத்தில் உள்ள எனாமலைத் தேய்த்துவிடும்.
4.பற்களை பாதுகாக்க கார்போஹைட்ரேட்கள், சர்க்கரைப் பொருட்கள் போன்றவை பற்சிதைவைத் தூண்டும் காரணிகளை சாப்பிடும் போது கவனமாக இருந்தால், பற்சிதைவுக்கான வாய்ப்புகள் குறையும்.
5.பற்களை பாதுகாக்க பற்சிதைவு ஆரம்பத்தில் ஒரு சிறிய கரும்புள்ளி போலப் பல்லின் மேற்பரப்பில் தோன்றும் நிலையிலேயே பல் மருத்துவரைச் சந்தித்து உரிய ஆலோசனையும் சிகிச்சையும் பெற்றால் மேற்கொண்டு பல் சொத்தை ஆகாமல் பாதுகாக்கலாம்.
6.பல்லில் உண்டாகும் கிருமிகள்நம் உடலின் முழுவதும் பரவி பல நோய்க்ளை உண்டாக்கும் .அதனால் சொத்தைப்பல் உண்டானால் உடனே நாம் கவனிக்க வேண்டும்