அருகம்புல்லை நன்றாக மென்று விட்டால் எந்த நோய் பறந்து போகும் தெரியுமா ?

 
arukampul

பொதுவாக அந்த கால பாட்டிகள் வீட்டிலிருந்தால் அவர்களிடம் கேளுங்கள் பல்வலிக்கு நூறு வைத்தியம் வீட்டிலிருக்கும் பொருளை கொண்டு சொல்வார்கள் .இந்த பல்வலிக்கு சில இயற்கை வைத்திய முறைகளை காணலாம்
1.இந்த பல்வலிக்கு பூண்டை உரித்து பச்சையாக பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் அதிலுள்ள அல்லிசின் என்ற பொருள் பல்வலியை குணப்படுத்தும் .

teeth
2..எந்த காலத்திலும் பல்வலி பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணம் கிராம்பு தான்.
3.அந்த கிராம்பால் ஆன தைலத்தை பல்வலி உள்ள இடங்களில் சில துளிகளை இட உடனே வலி பஞ்சாய் பறந்து போகும் ..
4.அடுத்து இந்த பல்வலிக்கு அருகம்புல்லின் சில கற்றைகளை வாயில் போட்டு நன்றாக மென்று, அந்த சாறு பல்வலி உள்ள இடங்களில் படுமாறு செய்ய பல்வலி இருக்குமிடம் இடம் தெரியாமல் போகும்  
5.அடுத்து சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பெருங்காயத்தை எலுமிச்சம் பழச் சாற்றில் குழைத்து, பல்வலி உள்ள இடங்களில் தடவினால் பல்வலி காணாமல் போகும் .
6.அடுத்து கொய்யா மரத்தின் இலை கொழுந்துகளை நன்றாக மென்று, அந்த இலைகளின் சாறு மற்றும் அதன் சக்கையை, பல்வலி உள்ள இடத்தில் சிறிது நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும் .இப்படி செய்த சிறிது நேரத்தில் பல்வலி குறையும்.