உடலில் அக்கறையுள்ளவங்க சர்க்கரை பொங்கல் சாப்பிட்டதும் இதை கொஞ்சம் சாப்பிடுங்க

 
sweet

பண்டிகைக் காலங்களிலும் இனிப்புகளா ஐயோ எனக்கு வேண்டாம் என்று தவிர்ப்பது நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் தான். அவர்க்ளே விரும்பினாலும் வீட்டில் இருப்பவர்கள் தடுத்துவிடுவார்கள்.

விருந்து நாள்களிலும் விழாக்காலங்களிலும் இனிப்புகளை விதவிதமான உணவுகளை கண்டு ஓடினாலும் சமயங்களில் நாக்கை கட்டுப்படுத்தமுடியாமல் சாப்பிட்டு அவதிப்படுபவர்களும் உண்டு.பண்டிகைக்காலங்களில் வயிற்றைப் பற்றி கவலைப்படாமல் பிடித்த உணவுகளை ஒரு பிடி பிடிக்கலாம்.

Sweet pongal recipe | Chakkara pongali | Sakkarai pongal


இஞ்சி
மசாலாக்கள் நிறைந்த சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அசைவ உணவுகளிலும், அரைத்த குழம்பு வகைகளி லும் காரபலகாரங்கள் வடை, போண்டா, அடை என அனைத்திலும் இஞ்சியைத் துருவலாக சேர்ப்பது வழக்கம். இஞ்சி செரிமானத்தைத் தூண்டும் முக்கிய உறுப்பு.

உண்ணும் உணவுகள் உழிழ்நீரோடு கலந்து மென்று சாப்பிடும்போது அவை எளிதில் செரிமானமாகிறது. அந்த உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்க செய்வதிலும் செரிமான அமிலத்தை ஊக்குவிப்படிலும் கல்லீரலில் சுரக்கும் பைல் என்னும் நொதியை யும் அதிகப்படுத்தி செரிமானத்துக்கு துணைபுரிகிறது.

கிழக்கு இந்தியாவில் பயிரிடப்பட்ட ஓமச் செடி, அதன் அசிடிட்டி, செரிமானாக் கோளாறு ஆகியவற்றைப் போக்கும் தன்மையால், இந்தூர், ஆந்திரப் பிரதேசம் ஆகியப் பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ரஸ்க் உள்ளிட்ட, தின்பண்டங்களில் சேர்க்கப்படுகிறது.  

ஓமத்தில் உள்ள தைமோல் (Thymol) பீனால், செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கிறது. அரை டீஸ்பூன் ஓமத்தை, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து, அது அரை டம்ளராக ஆகும் வரை சூடாக்கி, தினமும் காலை, மாலை பருகிவந்தால், வயிற்று மந்தம் குணமாகும்.  


சீரகம் (Cumin)

இரும்பு, கால்சியம், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ள மூலிகைச் செடி சீரகம். மசாலா உணவுகள், பிரியாணி, அசைவ ரெசிபிக்களில் சுவை, மணம் கூட்டவும், செரிமானத்தை எளிதாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இரைப்பை அலர்ஜியை குணமாக்குகிறது; நுண்தொற்றுக்களிடம் இருந்து இரைப்பையின் உட்பகுதியைப் பாதுகாக்கிறது.
நாள்பட்ட செரிமானக் கோளாறால், மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.