பூண்டுடன் உப்பு சேர்த்து பற்று போட்டால் என்னாகும் தெரியுமா ?

 
Health Benefits of Garlic

பொதுவாக சுளுக்கு பிரச்சினையால்  நரம்புகளில் பாதிப்பு மற்றும் தசை நார்கள் கிழிவது போன்ற கடுமையான பாதிப்புள்ள சுளுக்கு என்றால் அதற்கு கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ள வேண்டும்.  
சாதாரண சுளுக்குக்கு என்ன வீட்டு வைத்தியம் செய்யலாம் என இப்பதிவில் காணலாம் .  
1.கழுத்து பகுதியில் ஏற்பட்ட சாதாரண சுளுக்கு நீங்க, ஜாதிக்காய் பெரிதும் உதவுகிறது.
2.ஜாதிக்காயை உடைத்து அதோடு சிறிது பால் சேர்த்து நான்கு அரைக்க வேண்டும்.
3.பிறகு அதை வெதுவெதுப்பாகும்வரை கொதிக்க வைத்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட வேண்டும்.
4.ஒரு நாள் கழித்து அதை வெந்நீரில் கைவிட்டு மீண்டும் இதே போல பற்று போட வேண்டும்.

body pain tips
5.இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் பற்று போட்டால் சுளுக்கு இருந்த இடம் தெரியாமல் பறந்து போய் விடும் .
6 : முதுகு பகுதியில் சுளுக்கு ஏற்பட்டு அவஸ்த்தை படுவோர் பூண்டுடன் சிறிது உப்பு சேர்த்து இரண்டையும் நன்கு இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டால் விரைவில் எப்பேர்ப்பட்ட சுளுக்கு சரியாகி நன்றாக முதுகை திருப்பலாம் .
7 : கால் கைகளில் சுளுக்கு ஏற்பட்டு நரக வேதனை படுவோர் பிரண்டையை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் மற்றும் உப்பை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும்.
8.பிறகு அதை இதமான சூட்டில் சுளுக்கு உள்ள காலிலோ அல்லது கைகளிலோ  தடவி வந்தால் சுளுக்கு நீங்கி புத்துணர்வு பெறுவார்