முருங்கை இலை சாறில் சீரகம் சேர்த்து குடிக்க நம் உடலில் நேரும் அதிசயம்

 
murungai

பொதுவாக சிலருக்கு தாங்க முடியாத வயிறு வலியிருக்கும் .மேலும் அதிக உஷ்ணத்தாலும் ,அதிக உடல்  பயிற்சியாலும் வயிறு வலி தோன்றும் .
இப்பதிவில் நாம் வயிற்று வலி போக்குவது எப்படி என்று பார்க்கலாம் .
1.முதலில் தீராத வயிறு வலியால் அவதிப்படுவோர் , ஒரு டம்பளர் நீரை நன்கு கொதிக்க வைத்து பின் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து,
2.குடிக்கும் பதத்திற்கு நீரை ஆற்றி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் உடனடியாக எப்பேர்ப்பட்ட வயிறு வலியும் காணாமல் போகும்
3.அடுத்து வயிற்றில் பிசையும் அளவிற்கு வயிறு வலிக்கு ஆளானவர்கள் முருங்கை இலையில் இருந்து சாறு பிழிந்து அதோடு 50கிராம் நற்சீரகம் சேர்த்து நன்கு அரைத்து குடித்தால் எந்த வயிற்று வலியும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் வாய்ப்புள்ளது

stomach
4.கண்ட உணவை சாப்பிட்டு புட் பாய்சன் மூலம் வயிறு வலியால் அவதி படுவோர் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்து வந்தால் தீராதவயிறு வலியும் தீர்ந்து விடும்
5.அடுத்து வயிறு வலியால் துடிப்போர்  சீரகம் ஓமம் ஆகிய இரண்டையும் தலா 100 கிராம் எடுத்துக்கொண்டு அதை வறுத்து கொள்ளவும்
6.பின் அதோடு 100 கிராம் கற்கண்டு சேர்த்து மூன்று வேலையும் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் எப்பேர்ப்பட்ட வயிற்று வலியும் காணாமல் போய் விட்டு நல்ல நிவாரணம் கிடைக்கும்