நிம்மதியான தூக்கத்தை பெற உதவும் இந்த தண்ணீர்

 
sombu

பொதுவாக  சோம்பு தண்னீர் மற்றும் சோம்பு டீ நமக்கு ஆரோக்கியம் தரும் .இதன் மூலம் நமக்கு கிடைக்கவும் நண்மைகள் பற்றி இப்பதிவில் நாம் பார்க்கலாம்

1.ஒரு சொம்பு சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது .
2.மேலும் அது ஈரல் நோயைக் குணப்படுத்த இந்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது
3.சிலருக்கு வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி அதிகமாக இருந்து தொல்லை கொடுக்கும் அந்த சதைகள் சோம்பு மூலம் கரையும்.
4.அதிக  தொப்பை கரைந்து சரியான கச்சிதமான உடல் அமைப்பை தரும்.
5.சோம்புத் தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தி ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வல்லமை கொண்டது

sombu
6.சோம்புத் தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
தூக்கத்தைச் சீராக்கும்.
7.சோம்புத் தண்ணீர் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் கொடுத்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.