சோளம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கின்ற நன்மைகள்

 
cancer

பொதுவாக கோதுமையில் உள்ள புரதத்தைவிட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது.

சோளம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றது .உதாரணமாக பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.இது போல சோளம் மூலம் நாம் அடையும் மருத்துவ நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் காணலாம்

1.பொதுவாக சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைத்து , பல நோய்கள் உடலில் வராமல் தடுக்கிறது.

2.ஆரோக்கியம் தரும் மக்காச்சோளம் அதிகமாக சாப்பிடுவதால், மலசிக்கல் போன்ற பிரச்சனை நீக்குகிறது.

toilet

3.மேலும் இந்த சோளத்தில் உள்ள நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

4.ஆரோக்கியம் தரும் மக்காச்சோளம் செரிமான பிரச்சனைகளுக்கு இது தீர்வாக அமைகிறது.

5.சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. 6.குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.

7.சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன. குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் இந்த சோளத்தில் இருக்கின்றது.

8.சோளத்தில் உள்ள தயாமின் சத்து உடலில் நரம்பு மண்டலங்கள் சீராக இயங்க உதவும்.

9.சோளம் சாப்பிடுவது அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுவது, ஞாபக மறதி நிலை மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமைகிறது.

10.மேலும் சோளத்திலிருக்கும்  ஃபோலிக் ஆசிட்  மனித உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத சத்தாக இருக்கிறது.