அடைக்கப்பட்ட அறையில் தூங்கி எந்திரிக்கும்போது என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

 
thummal

பொதுவாக  இரவு முழுவதும் காற்று கூட புக முடியாத அறையில் நாம் தூங்கி எந்திரிக்கும்போது காலையில் குளிர்ந்த காற்று படும்போது தும்மல் உண்டாகிறது .இந்த தும்மலை எப்படி விரட்டலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.இரவில் அடைக்கப்பட்ட அறையில் கொசு வர்த்தி சுருளை உபயோகப்படுத்தும்போது அதிலிருந்து வெளியேறும் புகை நமக்கு தும்மலை உண்டாக்குகிறது .
2.குறிப்பாக வெட்ட வெளியில் பனி காற்று மூலம் வராத தும்மல் ,இப்படி அடைக்கப்பட்ட அறையில் தூங்கி எந்திரிக்கும்போது உண்டாகிறது .இவற்றை தவிர்க்க நாம் பல வழிகளை பார்க்கலாம்
3.குளிர்காலத்தில், பெரும்பாலான மக்கள் சளி பிரச்சனையால் சிரம படுகின்றனர்.
இந்த வீட்டு வைத்தியம் மூலம் தும்மல் பிரச்சனையை அகற்றலாம்-

thummal

4.அடிக்கடி தும்மல் பிரச்சனை உள்ளவர்கள் வைட்டமின் சி பொருட்களை உட்கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், வைட்டமின் சி சப்ளைக்கு சப்ளிமெண்ட்ஸ் பயன்படுத்தி வந்தால் இந்த தும்மலை ஒழிக்கலாம்

5..தொடர்ந்து தும்மல் வந்துக் கொண்டே இருந்தால் மூக்கை 5 முதல் 10 வினாடிகளுக்கு இருபுறமும் அழுத்தி மூடவும், இப்படிச் செய்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். இதனால் தும்மல் நிற்கலாம்.
6.அதே சமயம் மூக்கை மூடிக்கொண்டு மேல்நோக்கிப் பார்க்கவும், இப்படிச் செய்தால் சிறிது நேரத்தில் தும்மல் நின்றுவிடும்.இப்படி இயற்கையான வழிகளை மேற்கொண்டு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தும்மலை விரட்டி விடுங்கள்