தோல் நோய்களை விரட்ட குப்பை மேனி இலையை எப்படி பயன் படுத்தனும் தெரியுமா ?

பொதுவாக தோலில் சொறி ,சிரங்கு ,அரிப்பு ,கரப்பான் ,தோல் செதில் செதிலாக உதிர்தல்,தடிப்பு ,சிவப்பாகுதல் போன்ற தோல் நோய்கள் உண்டாகி நம்மை தொல்லை படுத்துகின்றன.இதற்கு இயற்கையாக என்ன செய்யலாம் என்று நாம் காணலாம்
1. தோல் அரிப்பு, சொறி போன்ற தோல் நோய்கள் குணமாக 15 முதல் 20 குப்பைமேனி இலைகளை எடுத்துக்கொண்டு குணப்படுத்தலாம் .
2.எப்படியென்றால் அதோடு அரை டீ ஸ்பூன் மஞ்சள் சேர்த்து ,அதில் இரண்டு டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும்.
3.பிறகு இதை ஆற வைத்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
4.பிறகு நமது உடலில் எங்கெல்லாம் சொறி, அரிப்பு போன்றவை உள்ளதோ அந்த இடங்களில் இதை ஒரு வாரம் தடவி வந்தால் சொறி, அரிப்பு போன்றவை சரியாகி நமது தோல் பளபளப்பாக மாறி விடும் .
5.அடுத்து கீழாநெல்லி இலையை நன்கு அரைத்து உடலில் எங்கெல்லாம் அரிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் பூசிக்கொண்டு விடவும் .
6.பின் 5 நிமிடம் கழித்து குளித்து வந்தால் அந்த அரிப்பு மற்றும் புண்கள் குணமாகி விடும்