சப்போட்டா பழத்துடன் தேயிலை சேர்த்து பருகினால் எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா ?

 
sappotta

பொதுவாக  சப்போட்டா பழம் நமக்கு நிறைய மருத்துவ நன்மைகளை கொடுக்கிறது .இந்த பழம் நமது ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுத்து இதய நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கிறது ,கொலஸ்ட்ரால் பிரச்சினையுள்ளவர்களுக்கு இது சிறந்த பழமாகும் .சப்போட்டாவில் உள்ள ஆரோக்கிய குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. இந்த பழத்துடன் தேயிலை சேர்த்து பருகினால் ரத்த பேதி குணமாகும் .இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்ஜூஸ் குடித்தால் நல்ல தூக்கத்தை பெறலாம் .
2.குடல் புற்று நோய் ஏற்படாமல் இருக்க இந்த சப்போட்டா ஜூஸ் உதவும் .மேலும் ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்ஜூஸ் உடன் நேந்ந்திரம் பழம் சாப்பிட்டால் குணமாகும் .

kudal


3.மேலும் எலும்பு தேய்மான நோய்கள் வராமல் இந்த பழம் நம்மை காப்பாற்றும் .
4.குழந்தைகளுக்கு அதிக அளவில் வரும் அஜீரணப் பிரச்சினையை  இந்த சப்போட்டா சரி செய்யும். சாப்பாடு செரிமானம் ஆக இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உதவும். மலச்சிக்கல் சரியாகும்.
5.இந்தப் பழத்தில் வைட்டமின்கள் சி, ஏ ஆகியவை இருப்பதால் குழந்தைகளுக்கு கண் பார்வை தெளிவாகும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
6.இந்த பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஹீமோகுளோபின் அளவும் மேம்படும். ஆர்பிசி எனப்படும் சிவப்பணுக்கள் உற்பத்தியும் சிறப்பாக இருக்கும்