சந்தனத்தையும், பன்னீரையும் உடலில் பூசி வர எந்த நோய் சரியாகும் தெரியுமா ?

 
summer

பொதுவாக அந்த  காலத்தில் மக்கள் முன்னோர்கள் விட்டு சென்ற வீட்டு வைத்தியத்தின் மூலம் வீட்டில் உள்ள உணவு பொருட்கள் மூலம் நோய்களை குணப்படுத்தி வந்தனர் . .அப்படிப்பட்ட வீட்டு வைத்தியத்தில் சிலவற்றை தொகுத்து கொடுத்துள்ளோம் அதை பற்றி நாம் இப்பதிவில் காணலாம்

1.உடலில் எனர்ஜி குறைவாக உள்ளோர் இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி கிடைக்கும்.

coconut

2.என்னேரமும் இளம் வயதிலேயே முடி கொட்டி அவதி ப்படுவோர் நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி கொட்டும் பிரச்சினை சரியாகும்.

3.உடலில் வேர்க்குரு கட்டியால் அவதிப்படுவோர் சந்தனத்தையும், பன்னீரையும் உடலில் பூசி வர வேர்க்குரு மறையும்.

4.உடலில் ரத்தம் குறைவாக இருப்போர் பீர்க்கன்காய் வேர் கசாயம் வைத்து குடித்து வர ரத்த சோகை பிரச்சினை சரியாகும்.

5.எந்நேரமும் வயிறு உப்பிசத்தால் அவதிப்படுவோர் புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குடித்து வர பசி நன்றாக எடுக்கும்.

6.கால்களில் மழை நாளில் சேற்று புண் வந்து அவதிப்படுவோர் காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வந்தால் சேற்றுபுண் 2 நாட்களில் சரியாகிவிடும்.