மன அழுத்தம் மற்றும் உஷ்ண உடம்பு உள்ளவர்கள் செய்ய வேண்டிய இயற்கை சிகிச்சை முறை

 
ஸ்ட்ரெஸ்க்கு குட் பை சொல்ல ஈஸியான சில வழிகள்! #Stress

பொதுவாக  உடல் சூடு அதிகமாக இருப்போரின் உடல் உறுப்புகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் .இதனால் வயிறு வலி முதல் முகப்பரு வரை பல்வேறு உடல் கோளாறுகள் வரும் .இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.சீரகத்தை தண்ணீரில் இரவு ஊறவைத்து அதை மறுநாள் சாப்பிட்டாலே உடல் சூடு ஓடிவிடும் .

seeragam
2.மேலும் இளநீர் ,ஆட்டுப்பால் ,பருப்பு கீரை நெல்லிக்காய் ,மன தக்காளி ,போன்ற பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும்
3.நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும்.
4.எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிது மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
5.இந்த எண்ணெய் சூடு ஆறியவுடன் எண்ணையை இரண்டு காலின் பெருவிரல் நகத்தில் மட்டும் தடவி விட வேண்டும்.
6.சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனால் உங்கள் உடம்பு உஷ்ணம் குறைந்து மெது மெதுவாக குளிர்ச்சி அடைவதை உங்களால் உணர முடியும்.
7. மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து தஙகளின் உடல் உஷ்னத்தை .குறைத்து கொள்ளவும் .