நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் இந்த இலை

பொதுவாக கறி வேப்பிலையில் வைட்டமின், கால்சியம், இரும்பு, தாதுக்கள், பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற வைட்டமின்கள் அடங்கியுள்ளது .இந்த இலையை எப்படி சாப்பிட்டால் என்ன நன்மை என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நமக்கு இதய நோய் வராமல் நம்மை பாதுகாக்கும்
2.மேலும் இது முடிக்கு வலுவூட்டுகிறது மற்றும் பொடுகுவராமல் பாதுகாக்கிறது.இது வயிற்றில் தேவையற்ற கழிவுகள் சேராமல் தடுத்து நமக்கு மலச்சிக்கல் பிரச்சினையை தடுக்கிறது
3.கொசுறாக கிடைக்கும் கறிவேப்பிலை மூலம் நீரிழிவு நோய் ரத்த அழுத்த நோய் போன்றவை வராமல் தடுக்கலாம்..இது இயற்கையாகவே ரத்தத்தில் உள்ள சர்க்கரைஅளவு உயராமல் பாதுகாக்கிறது .
4.கறிவேப்பிலையில் பாஸ்பரஸ் சத்து நிறைய உள்ளது மற்றும் கெட்ட கொழுப்பு அறவே இல்லை
5.தினமும் வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிட்டு வந்தால் ரத்தக்குழாயில் உள்ள கெட்ட கொழுப்பு நம்மை விட்டு நீங்கும்
6.மேலும் இதயம் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்கு கருவேப்பிலை துணை புரியும்
7... நாம் கருவேப்பிலையை சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதனால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.