பச்சையாக வெங்காயத்தை சாப்பிடுவதால் என்ன நன்மை தெரியுமா ?

பொதுவாக உடலில் உஷ்ணம் அதிகரித்தால் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் நல்லது .அது போல் வெங்காயத்துக்குள் கொட்டி கிடக்கும் ஆரோக்கியம் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.பச்சையாக வெங்காயத்தை சாப்பிடுவதால் தூக்கமின்மை, புற்றுநோய், இரத்தக்கொதிப்பு வராமல் தடுக்கப்பட்டு நம் ஆரோக்கியம் மேம்படுகிறது
2.பச்சையாக வெங்காயத்தை சாப்பிடுவதால் எலும்புகளுக்கும் நல்லது.
3.வெங்காயத்தின் சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடுவதால் சளி, காய்ச்சலுக்கு நல்லது, இதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
4.சிலர் அதிகமாக நிற்பதால் வரும் கால் வலிக்கு பச்சை வெங்காயம் நல்ல பலன் கிடைக்கும்
5.வெங்காயத்தில் Anti-Bacterial, Anti-Fungal இருப்பதால் கூந்தல் வளர்வதற்கு உதவும்.
6.தயிருடன் பச்சை வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு வலிமையை கொடுத்து ஆரோக்கியம் சிறக்கும் .
7.பல் வலிக்கும்போது பற்களிள் பச்சை வெங்காயத்தை வைப்பதால் வலிகள் இருக்காது.
8.மேலும் தேள் குளவி கடிக்கு அந்த இடத்தில் வெங்காயத்தை பாதியாக வெட்டி வைக்க வேண்டும் .தலைவலிக்கு இந்த வெங்காயத்தை நறுக்கி முகர்ந்து வந்தால் உடனே குணம் தெரியும் ,
9.மேலும் இருமலுக்கு வெங்காயத்துடன் மோர் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும் .