கேழ்வரகில் மோர் ,வெங்காயம் கலந்து குடித்தால் எந்த நோயெல்லாம் காணாமல் போகும் தெரியுமா ?..

 
ragi

பொதுவாக பழங்காலத்தில் நம் நாட்டில் பஞ்சம் வந்த போது கூட ஆங்கிலேயர்கள் கஞ்சி தொட்டி ஊருக்கு ஊர் வைத்து அதற்குள் கூழ் ஊற்றி மக்களின் பஞ்சம் போக்கினர்.அதனால்  இந்த பதிவில் கூழின் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்
 1.கேழ்வரகுக் கூழ் அப்படியே சாப்பிடாமல் மோர் கலந்து  வெங்காயம் பச்சை மிளகாய் கலந்து சாப்பிடுவது நல்லது.
2.இது நம் மன அழுத்தத்தை குறைக்கும் ,இன்சோம்னியா என்ற தூக்கமின்மை நோயை குணப்படுத்தும்
3.கேழ்வரகை முளைகட்டி உலர்த்தி அதைப் பொடியாக்கி  “ராகிமால்ட்’’தயாரிக்கலாம்  
4.இது பல மடங்கு சக்தியுடையது மட்டுமல்லாமல் இதய நோய்களுக்கு நல்லது

Heart attack
5.கேழ்வரகு மாவு ஒரு ஸ்பூன் எடுத்து 5 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கஞ்சியாக்கி குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.இது அவர்களுக்கு நல்ல வலுவை கொடுக்கும்
6.பெரியவர்களுக்கு இது கெட்டக் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால், இதயநோய் வராமல் காக்கும்.
7.பெண்களுக்கு கேழ்வரகு மிகவும் நலம் தரும். குழந்தையை பெற்ற பெண்களின் பால்சுரப்பு குறைபாட்டை நீக்கும் ஆற்றல் கொண்டது இந்த கூழ்