சிறுநீரக நோயுள்ளோருக்கு சிறந்த உணவு இந்த காய்

 
kidney

பொதுவாக பூசணிக்காயில் நம் உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும் .இதன் மருத்துவ குணங்கள் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்

1.பூசணிக்காய்  விதைகளில் விட்டமின் B, விட்டமின் A, மினரல்ஸ், தாது உப்புக்கள், கால்சியம் (Calcium), இரும்புச் சத்து, பாஸ்பரஸ், லினோனெலிக் அமிலம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது .
2.மேலும் இந்த காய் சிறுநீரக நோயுள்ளோருக்கு சிறந்த உணவு ஆகும் ,

pumpkin
3.மேலும் இது நெஞ்சு சளி ,மூச்சிரைப்பு ,இதயம் சம்மந்தமான நோய்கள் ,புற்று நோய்கள் ,போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளதால்
4.வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து கொண்டால் நம் ஆரோக்கியம் பலம் பெறும் ,
5.மேலும் இந்த
பூசணிக்காய் நீர்க் கடுப்பைப் போக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நல்லது.
6.பித்தத்தைக் கட்டுப்படுத்தும், உடலுக்கு வலுவூட்டும் என்பதால் இதில் லேகியம் தயாரித்து கொடுப்பார்கள் .இந்த வெள்ளைப் பூசணியிலிருந்து மருத்துவர்கள் லேகியம் தயாரிக்கிறார்கள்.
7. வெள்ளை பூசணி லேகியம் என்றும், கூஷ்மாண்ட லேகியம் என்றும் இதற்குப் பெயர்.இந்த லேகியம் இருமல், காச ரோகம், துப்பினால் இரத்தம் வருதல், உடல் வளர்ச்சி ஆகியவற்றிற்கு நிவாரணமளித்து நம்மை பாதுகாக்கிறது