இதயம் மற்றும் பல் ஈறுகள் பலம் பெற இந்த பழத்தை சாப்பிடுங்க சார் ..

 
heart heart

பொதுவாக  மாதுளையில் நம் மனஅழுத்தத்தை குறைக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு நிறைந்துள்ளது ,மேலும் உடற்பயிற்சி செய்வோர் அதற்கு முன்பு இந்த மாதுளையை சாப்பிட்டால் உடலுக்கு அளவற்ற சக்தி கிடைக்கும் ,அதனால் நாம் இப்பதிவில் மாதுளையின் ஆரோக்கிய நன்மை பற்றி காணலாம்
1.மேலும் இந்த பழம் நம் ரத்த அழுத்தத்தை சீராக்கும் .
2.இந்த பழம் நம் தலைமுடிக்கும் ,மூளைக்கும் ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் ,மேலும் கருவுறாத பெண்களின் கருப்பை வளர்ச்சிக்கு இந்த பழம் உதவும் .
3.மேலும் உடல் எடை குறையவும் ,சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் இந்த பழம் உதவும் .

madhulai

4.சிலருக்கு இம்முனிட்டி பவர் குறைவாக இருக்கும் ,எனவே ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும், பொதுவான நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கவும் மாதுளை உதவுகிறது.
5.சிலருக்கு பல் பிரச்சினையிருக்கும் .மாதுளையில் உள்ள ஹைட்ரோஆல்கஹாலிக் சாறு நுண்ணுயிரிகளின் காரணமாக பற்களில் படலம் உருவாவதை கிட்டத்தட்ட 84 சதவீதம் குறைக்கிறது என்று ஒரு ஆய்வு சொல்கிறது.
6.சிலருக்கு எலும்புகள் வலுவிழந்து காணப்படும் .பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட பல ஆய்வுகள் மாதுளையை தவறாமல் சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று சொல்கிறது.
7.தொடர்ந்து மாதுளை உண்டு வந்தால் இதயம் மற்றும் பல் ஈறுகள் பலம் பெரும்