கடுகு எண்ணெயை எப்படி யூஸ் பண்ணால் பொடுகை விரட்டலாம் தெரியுமா ?

 
hair fall prevent tips hair fall prevent tips

பொதுவாக தலை முடிக்கு எண்ணெய் தேய்த்தால் அது அவர்களின் தலை முடிக்கு மட்டுமல்ல உடலுக்கும் ஆரோக்கியம் தரும் .உடல் உஷ்ணம் குறைவதுடன் ,பல்வேறு நண்மைகள் கிடைக்கும் .இந்த தலை முடிக்கு கடுகு எண்ணெய் தேய்த்தால் என்ன ஆரோக்கியம் கிடைக்கும் என்று இந்த பதிவில் நாம் காணலாம்

1.கடுகு எண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடேற்றி, கூந்தலில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்த பின் குளித்தால், தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

2.சிலருக்கு பொடுகு தொல்லை இருக்கும் . இந்த பொடுகுத் தொல்லையை நீக்க கடுகு எண்ணெய்யில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊறவைத்து பின்னர் குளிக்க வேண்டும்.

3.இதனை வாரம் இருமுறை என ஒருமாதம் செய்து வந்தால் தலையில் உள்ள பொடுகானது நீங்கிவிடும்.

4.சிலருக்கு கூந்தல் வறட்சி இருக்கும் .கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.

Shiny Hair

5.சிலருக்கு கூந்தல் வளர்ச்சியிருக்காது .பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்ய குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

6.மேலும் அவர்களின் கூந்தல் நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும் இருப்பதற்கு, கடுகு எண்ணெய்யை தயிருடன் கலந்து, தலையில் தடவி, ஊறவைத்து குளிக்க வேண்டும்.

7.இதனால் கூந்தல் பொலிவோடு இருப்பது மட்டுமின்றி, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

8.கடுகு எண்ணெய்யில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பொருள் அதிகளவில் உள்ளது.

9.ஏனெனில் இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும் போது, அவை வைட்டமின் ஆக மாற்றமடைந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது பொடுகுத் தொல்லையையும் நீக்கும்.