சுடுதண்ணீரில் பெருங்காய தூளை கலந்து குடித்தால் எந்த நோய் சரியாகும் தெரியுமா ?

 
stomach

பொதுவாக  பெருங்காய தூளில் ஆரோக்கியம் அடங்கியுள்ளது இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம் .
1.சுடுதண்ணீரில் பெருங்காய தூளை கலந்து குடித்தால் வயிற்று வலி ,பெண்களுக்கான மாதவிடாய் வலி ,அஜீரண கோளாறு முதல் அசிடிட்டி கோளாறு வரை இதன் மூலம் சரியாகும்
2.சிலருக்கு நெஞ்சு, முதுகு ஆகிய இடங்களில் வலி உண்டாகும்.இதற்கு பெருங்காய தூளை சாப்பிட்டால் சரியாகும் ,

perunkayam
3.மேலும் நரம்பு கோளாறுகளை சரி செய்து  ,நோய் எதிர்ப்பு சக்தி வரை இது அள்ளி கொடுக்கும் ஆற்றல் உடையது
4.இரண்டு சுண்டைக்காயளவு பெருங்காயத்தை நெய்யில் வறுத்து தூள் செய்து  சாப்பிட்டு வந்தால் வாய்வு முழுவதும் வெளியேறி விடும்.
5.இரண்டு சுண்டைக்காயளவு பெருங்காயத்தை சிற்றாமணக்கெண்ணெயில் பொரித்து எடுத்து விட்டு அதே எண்ணெயில் தோல் உரித்த வெள்ளைப் பூண்டு பற்கள் 20 கிராம் போட்டு, நன்றாகச் சிவந்து வரும் சமயம் பெருங்காயத்தையும் போட்டு, கீரைக் கடையும் மத்தைக் கொண்டு கடைய வேண்டும்  
6.இது கூழ்போல மெழுகு பதம் வந்தவுடன் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து 30 கிராம் பனை வெல்லத்தை அதில் போட்டு பாகுபதம் வரும் சமயம் அதில் இதைப் போட்டு மறுபடி கடைந்து லேகியம் போலச் செய்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும் .
7.இந்த பெருங்காய உண்டையை 21 நாட்கள் சாப்பிட்டால் தீராத பாரிச வாய்வும் குணமாகும்.