ஒழுங்காய் மாதவிடாய் வராமல் போக ஒன்பது காரணங்கள்

பொதுவாக சில பெண்களுக்கு பல்வேறு காரணத்தால் மாதவிடாய் தள்ளி போகும் .இப்படி மாத விடாய் தள்ளி போக என்னென்னெ காரணம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
1.ஹார்மோன் சமநிலையில்லாமல் இருக்கும் போது, கருமுட்டைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
2.உடற்பருமன் அதிகரிக்கும்போது மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கும்.
3.அதிகப்படியான மன அழுத்தம் மாதவிடாய் சுழற்சியில் தாமதத்தை ஏற்படுத்தலாம்.
4.குழந்தைக்கு பாலூட்டும் காலங்களில் மாதவிடாய் தள்ளிப் போகும்.
5.பெரும்பாலும் 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும்.
6.தைராயிட் பிரச்சினை மாதவிடாய் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம்
7. அளவுக்கு மீறிய உடற்பயிற்சியானது மாதவிடாய் காலத்தை தள்ளிப் போகச் செய்யலாம்.
8. பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்வது ஹார்மோன் மற்றும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது.
9.கருத்தரித்த பெண்களுக்கு மாதவிடாய் தவறும்.