மிளகின் ஆச்சர்யப்பட வைக்கும் மருத்துவ குணங்கள்

 
pepper oil

பொதுவாக மிளகோட குணங்கள்னு பாத்தா... அது விஷத்தை முறிக்கும் .இதன் மற்ற ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்பதிவில் நாம் காணலாம்
1.ஜலதோஷத்தினால் சளி வெளியே வராமல் தொல்லை கொடுக்கும் .
2.அப்போது வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதிவரும்வரைக் கொதிக்க வைத்து.

cold
3. இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இதேபோல மூன்று நாள் சாப்பிட்டால் போதும். வறட்டு இருமல் காணாமல் போய் விடும்
4.ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால், ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.
5.மிளகு வறுபட்டு சிவந்து கருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்கவிட வேண்டும்.
6.கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக் கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும்.
7.மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்து விடவேண்டும். இதனால் இருமல் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்