கல்லீரல் செயல்பாட்டுக்கு உதவும் இந்த ஜூஸ்
பொதுவாக பீட்ரூட் ஜூஸை குடித்தால் நம் உடல் ஆரோக்கியம் பெறும் .இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இதில் நைட்ரேட் சத்து அதிக அளவில் இருப்பதால் வயதானவர்களின் அறிவாற்றல் சிறப்பாக செயல்பட இது மிகவும் உதவிகரமாக உள்ளது .
2.மேலும் வெளிநாடுகளில் 26 முதியோர்களுக்கு இந்த ஜூசை கொடுத்து சோதனை செய்து பார்த்ததில் அவர்களின் ஞாபக சக்தி சிறப்பாக முன்னேற்றம் அடைந்துள்ளதை கண்டு ஆச்சரியப்பட்டனர்
3.எனவே வயதான பின்னர் வரும் ஞாபக மறதி நோயை குணப்படுத்துவதில் இந்த பீட் ரூட் ஜூஸ் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது எனலாம் .
4.நம் உடலின் மிக முக்கியமான உறுப்பான கல்லீரலின் சிறப்பான செயல்பாட்டுக்கும் இந்த ஜூஸ் மிகவும் உதவியாக இருக்கிறது
5.பொதுவாக வயதானவர்களை அதிகமாக பாதிக்கும் நோய்களில் ஒன்றாக எலும்பு தேய்மான நோய் இருக்கிறது.
6.இந்த நோயால் உடலிலுள்ள அனைத்து மூட்டுகளிலும் வீக்கம் மற்றும் வலி ஏற்படும்.
7.இதற்கு பீட்ரூட் ஜூஸ் சிறந்த நிவாரணமாக இருக்கும் என்று ஆயுர்வேதம் குறிப்பிட்டுள்ளது .
8.எனவே ஆர்தரைடிஸ் பிரச்சினை வராமலிருக்க அடிக்கடி இந்த ஜூஸை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்கிறார்கள்