பட்டைப் பொடியை உணவில் சேர்ப்பதன் மூலம் எந்த நோயெல்லாம் ஓடும் தெரியுமா ?
பொதுவாக பலருக்கும் தொப்பை பிரச்சினை வாட்டி வதைக்கிறது .இந்த தொப்பைக்கு காரணம் முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே இருப்பது மற்றும் உடற்பயிற்சியின்மை காரணம் .இந்த கொழுப்பு பிரச்சினையை எப்படி இயற்கை முறையில் குறைக்கலாம் என்று இந்த பதிவில் நாம் காணலாம்
1.காய்கறிகளில் காளிப்ளவர் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றில் அதிக அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது.
2.இந்த காலிப்ளவர் கொழுப்புகளை குறைக்கவும் உதவும். எனவே தொப்பையை எளிதாக குறைக்கலாம்.
3.பூண்டு உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
4.மேலும் கொழுப்பையும் குறைக்கும் தன்மைக் கொண்டது. எனவே, பூண்டு சாப்பிடுவதன் மூலமும் தொப்பையைக் குறைக்கலாம்.
5.ஆப்பிளில் உள்ள ஒரு வகையான சத்து உடலுக்கு தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றும் தன்மை உடையது. எனவே, தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் படிப்படியாக தொப்பையை குறைக்கலாம்.
6.பட்டை என்பது மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். பட்டைப் பொடியை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
7.அதுமட்டுமின்றி பட்டைப் பொடி நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
8.இஞ்சி நாம் உணவில் சேரப்பதனால் தேவையற்ற கொழுப்புக்கள் 20 சதவீதம் வரை குறைக்கலாம். எனவே, தொப்பையை எளிதாகக் குறைக்கலாம். அன்றாட உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வது நல்லது.
9.முட்டை நமது உடலில் உள்ள அதிகபடியான கலோரிகளைக் கரைக்கும். எனவே, முட்டையை நமது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது. முட்டை தொப்பையைக் குறைக்க பெரிதும் பயன்படுகிறது
10.ஸ்ட்ரா பெர்ரி மற்றும் ப்ளாக் பெர்ரி போன்ற பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதனால் கொழுப்பைக் குறைக்கும்.