மூக்கடைப்பை மூணே நிமிஷத்தில் சரி செய்யும் வழிகள்

 
cold

பொதுவாக சளி பிடித்து கொண்டால் பலருக்கும் மூக்கடைத்து கொண்டு மூச்சு விட சிரமப்படுவதுண்டு இந்த மூக்கடைப்புக்கு சில இயற்கை வழிகள் மூலம் சில நிமிடத்திலேயே தீர்வு காணலாம் அது ப்பற்றி இந்த பதிவில் பாக்கலாம்

cold

1.மூக்கடைப்பால் அவதிப்படுவோர் நீராவி பிடிக்கலாம் .இப்படி நீராவி பிடிப்பதன் மூலம், தலை மற்றும் மூக்கில் அடைக்கபட்டிருக்கும் நீர் வெளியேறுகிறது .

2.முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்.

3.அடுத்து ஒரு போர்வையை நன்றாக போர்த்திக் கொண்டு விடவும் .அடுத்து தண்ணீரில் இருந்து வெளியேறும் ஆவி முகத்தில் படுமாறு குனிந்து கொள்ள வேண்டும்.

4.அந்த தண்ணீரில் இருந்து வரும் ஆவியை நன்றாக உள்ளிழுத்து வெளியில் விடவும்.

5.இந்த நீராவி பிடிக்க  புதினா அல்லது மற்ற எதாவது ஒரு மூலிகையை சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் தீர்வு இரட்டிப்பு ஆரோக்கியத்தை தரும்.

6.மேலும் வீட்டில் பயன்படுத்தும் எண்ணெயுடன் சிறிது மூலிகைகளை சேர்த்து பயன்படுத்துவது மூக்கடைப்பை விலக்கும்.

7. அடுத்து கொதிக்க வைத்த நீரில், சில துளி தைல எண்ணெய்யை தெளிக்கவும். அந்த நீரில், நீராவி பிடிப்பதன் மூலம், மூக்கடைப்பு உடனே சீராகி, ஆரோக்கியம் பிறக்கும்

8. இந்த மூக்கடைப்பு குணமாக புதினா எண்ணெயையும் இதற்கு மாற்றாக பயன்படுத்தலாம் .

9.அடுத்து மூக்கடைப்புக்கு வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து , சில துளிகள் மூக்கிற்குள் விடவும்.

10.. மூக்கடைப்பை சரி செய்ய, பூண்டு பற்களை முழுதாக கடித்து விழுங்கலாம். அல்லது சூப் செய்து பருகலாம்.