மூட்டு வலிக்கு ஒரு அருமையான வீட்டு வைத்தியம் .

 
leg pain

பொதுவாக  ,மூட்டுகளில் வலி வந்துவிட்டால் நம்மை படுத்தி விடும் .இதற்கு ஒரு இயற்கை பானம் எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம் .

1.முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கேழ்வரகு மாவை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். 2.அதனுடைய பச்சை வாடை போகும் அளவிற்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 3.அடுத்தபடியாக கருப்பு எள்ளை சூடான கடாயில் கொட்டி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
4.எள் கடாயில் கொட்டிய உடன், பட் பட் என வெடிக்க தொடங்கும். அது வரை வறுத்துக் கொள்ள வேண்டும். 5.எள்ளு கருகி விடக்கூடாது. அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள்.

moottu pain tips from aththi milk
6.அதில் வறுத்த எள்ளு, சோம்பு, கற்கண்டு இந்த 3 பொருட்களையும் போட்டு நன்றாக பொடி செய்து, அந்த பொடியை வறுத்த கேழ்வரகு மாவுடன் நன்றாகக் கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
7.பாலை காய்ச்சி ஒரு டம்ளர் அளவு சூடாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு நீங்கள் அரைத்த பொடியை சேர்த்து, அதில் 1/4 டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். 8.இந்த கரைசலை சூடாக இருக்கும் பாலில் ஊற்றி கலந்து அப்படியே குடித்து விடவேண்டியது தான்.