புதினா சப்பாத்திக்குள் பதுங்கியுள்ள நன்மைகள்

 
chappathi

பொதுவாக புதினா நம் உடலுக்கு பல நன்மைகள் செய்யும் ஆற்றல் கொண்டது .இந்த புதினாவை வைத்து
புதினா சப்பாத்தி எப்படி செய்வது என்றும் அதை சாப்பிட்டால் என்ன பலன் என்றும் பார்க்கலாம்.

1.புதினாவை பயன்படுத்தி சட்னி செய்து சாப்பிடுவது தான் வழக்கம். ஆனால் அதனை பயன்படுத்தி சப்பாத்தி எப்படி செய்வது என பார்க்கலாம்.

2.முதலில் தேவையான அளவு கோதுமை மாவை எடுத்து கொள்ள வேண்டும்.

mint
3.அதில் பொடியாக புதினா இலைகளை நறுக்கி சேர்த்து பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் சிறிதளவு இஞ்சி உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

4.பிறகு மாவை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து அதனை 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

5.பிறகு உளறு புதினா சிவப்பு மிளகாய் தூள் உப்பு சேர்த்து தனியாக எடுத்து வைத்துக்கொண்டு நாம் கலந்து வைத்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருவாக்கி அதன் மீது ஒட்டுமாறு உருட்ட வேண்டும்.

6.பிறகு சப்பாத்தி உருட்டி சூடான தோசை கல்லில் இருபுறமும் நெய் தடவி செய்ய வேண்டும்.
7.இப்படி செய்தால் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த புதினா சப்பாத்தி தயாராகும்.

8.இது நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கொடுக்கிறது தலைவலி பிரச்சனை ஜீரண சக்தி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட இது மிகவும் உதவுகிறது
9.மேலும் வாயில் துர்நாற்றத்தை போக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது.

10.குறிப்பாக வயிற்றுப்போக்கு வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது